சீனாவில் ஐபோன் வாங்குவதற்காக, பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை விற்ற தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் Fujian மாகாணத்தைச்சேர்ந்த Duan , Xiao Mei தம்பதிகள், QQ என்ற சமூக வலைதளத்தில் தங்கள் குழந்தையை விற்பதாக அறிவித்திருந்தனர். பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை 23 ஆயிரம் யுவான்களுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்க இவர்கள் விளம்பரம் அளித்திருந்தனர். இதனை கண்ட ஒருவர் தனது சகோதரிக்காக இந்த தொகையை கொடுத்து குழந்தையை வாங்கியிருக்கிறார். குழந்தையை விற்ற பின் இருவரும் வேறிடங்களுக்கு தப்பிய நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தையை விற்பது சட்டவிரோதமானது எனத்தெரியாது என்று MEI கூறினாலும், அவருக்கு இரண்டரை ஆண்டுகளும், தந்தை Duan க்கு 3 ஆண்டுகளும் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment